சுகம் சித்த மருத்துவ மையம்

சுகம் சித்த மருத்துவ மையம்
10/683, P.T.C complex,
சுரண்டை ரோடு
பாவூர்சத்திரம்-627808 ,
TIRUNELVELI DT, TAMILNADU
9488472592

Sunday, 24 August 2014

சுக்கிலக் குறைவு, பலவீனம்

அசுவகந்தி லேகியம்
        உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு 500 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி வகைக்கு 25 கிராம் பனைவெல்லம் 1500 கிராம், நெய் 150 கிராம்.
செய்முறை: 1 லிட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின் பதனப்படுத்தவும்.
அளவு: 10 கிராம் தினம் 2 வேளை, பால் அல்லது நீருடன்.
தீரும் நோய்கள்: சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், இளைப்பு முதலிய நோய்கள் நீங்கி உடல் வலுவடையும்.
குறிப்பு: இந்த லேகியத்துடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிடமிகு இரத்தவிருத்தியுண்டாகி, நரம்புகள் பலமடையும். இது ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் ஆகும்.

No comments:

Post a Comment